கேரளாவில் உணவகம் ஒன்றில் ஷவர்மா உணவு வாங்கி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடுங்கண்டத்தைச் சேர்ந்த பிபின் என்பவர், கடந்த புத்தாண்டு தினத்தன்று மதியம் அப்பகுதியில் உள்ள கேமல் ரெஸ்டோ நிறுவனத்திடமிருந்து மூன்று ஷவர்மாக்களை ஆர்டர் செய்துள்ளார். இதனை அந்த வீட்டில் இருந்த ஏழு வயது குழந்தை உட்பட அவர் மற்றும் அவரது தாய் ஆகியோர் உட்கொண்டுள்ளனர். 7 வயது சிறுவனுக்கு உடனடியாக வாந்தி மயக்கம் ஏற்பட்டு நெடுங்கண்டம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அடுத்த நாள், பிபின் மற்றும் தாயார் இருவரும் இதே பிரச்னையால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இடுக்கியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஃபுட் பாயிசன் பிரச்னை ஏற்பட்டதால், உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணையைத் தொடங்கினர். விஷத்தன்மையை ஏற்படுத்திய ஷவர்மாவை விற்பனை செய்த ஹோட்டலில் சோதனை நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஹோட்டலில் பணிபுரியும் எட்டு ஊழியர்களில் 6 பேரின் ஹெல்த் கார்டுகள் புதுப்பிக்கப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஓட்டலின் உரிமம் புதுப்பிக்கப் படவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். பாதிக்கப்பட்ட 3 பேரும் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தாய் லிசி உடல் அசதி காரணமாக இன்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
Next Post
காலையில் அண்ணனுடன்..!! அப்புறம் தம்பியுடன்..!! திருமணம் முடிந்த கையோடு அரங்கேறிய சம்பவம்..!!
Sun Jan 8 , 2023
You May Like
-
2024-06-14, 3:42 pm
இன்று பூமியை நோக்கி வேகமாக வரும் 63 அடி ‘சிறுகோள்’..!! எச்சரிக்கை விடுத்த நாசா!!
-
2024-02-18, 5:30 am
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 35% மதிப்பெண்…! வெளியான புதிய அரசாணை…!
-
2024-04-05, 11:07 am
’ஓட்டுக்கு வாக்காளர்கள் பணம் வாங்கினால் நடவடிக்கை’..!! சத்யபிரதா சாஹூ எச்சரிக்கை..!!
-
2022-10-31, 4:27 pm
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி… நவம்பர் 6-ல் பேரணி…