fbpx

சிறுநீர் டப்பாவில் தரப்படும் சாப்பாடு!… உலக நாடுகளின் விசித்திரமான திருமண சடங்குகள்!

ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒவ்வொரு வகையான திருமண சடங்குகள் உள்ளன. சலிப்பை உண்டாக்கும் விதத்தில் சில திருமண சடங்குகள் இருந்தாலும் ஒரு வழியாக அவற்றை இலகுவாக செய்து முடித்து விடலாம். ஆனால், எல்லா நாட்டிலும் அவ்வாறு இலகுவான சடங்கு சம்பிரதாயங்கள் இருக்காது. திருமணமான ஜோடியை நம் வழக்கப்படி கேலிசெய்து சில விடயங்களை செய்வோமல்லவா? இவை பொதுவாக நகைச்சுவைக்காக செய்வார்கள். ஆனால் அதையே சம்பிரதாயமாக கருதும் நாடுகளும் திருமண பழக்கவழக்கங்களும் உள்ளன. அவற்றில் சில சடங்குகள் ஆபத்தமானவை, சில வேடிக்கையானவை. அவற்றில் செருப்பு மாலைகளும் உள்ளவென்றால் நம்புவீர்களா? நம்புங்கள். அவ்வாறான விசித்திர பழக்கவழக்கங்கள் தொடர்பாகவே இப்போது பார்க்கவுள்ளோம்.

பல விசித்திரமான திருமண பழக்கவழக்கங்களைக் கொண்ட நாடு இந்தியா. விலங்குகள் மற்றும் மரங்களுக்கு பெண்களை திருமணம் செய்யும் நடைமுறைகூட அங்குள்ளது. இதற்கும் மேலாக திருமணம் சம்பந்தமாக இந்தியாவில் காணப்படும் மிகவும் பிரபலமான சடங்குகளில் ஒன்றுதான் சப்பாத்தை மறைப்பது. இது ஜூட்டா சோரி என்று அழைக்கப்படுகிறது. மணமேடைக்கு ஏறும் மணமகன் காலணிகளை கழற்றும்போது மணமகளின் தோழிகள் அவற்றை மறைத்து விடுவார்கள். பின்னர் அவர்கள் மணமகனிடம் காலணிகளை திருப்பித் தர வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டுமென கேட்பார்கள். இதே சந்தர்ப்பத்தில் மணமகனின் தோழர்களும் சும்மா இருக்காமல் மறைத்து வைத்த மணமகனின் சப்பாத்தை எப்படியாவது கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவர்கள் சரியாக கண்டுபிடிக்கமாட்டார்கள்.

பிரஞ்சு திருமண சடங்கை லு லே பாட் டி சேம்ப்ரே என்று அழைப்பார்கள். இந்த சடங்கு திருமணத்தின் முடிவில் நடைபெறுகிறது. திருமண தம்பதியினருக்கு மதுபானம் மற்றும் பல்வேறு எஞ்சியவற்றின் கலவையை சிறுநீர் கழிக்கும் டப்பாவில் போட்டு வரவேற்கிறார்கள். இது தம்பதியினருக்கு தேனிலவுக்கு செல்ல பலம் தரும் என்று நம்பப்படுகிறது. எனவே மணமகனும் மணமகளும் அவர்கள் பெறும் உணவு அல்லது பானத்தை சுவைக்க வேண்டும். இந்த அசிங்கமான சடங்கின் ஒரு சிறந்த பக்கம் என்னவென்றால் புதிதாக வாங்கிய யூரின் டப்பாதான் பயன்படுத்தப்படுகிறது. யாரும் பயன்படுத்தவில்லை. அதுவரை நல்லது.

புதிய தம்பதியினர் கழிப்பறைக்கு செல்லத் தடை: இந்த அபத்தமான சடங்கு மலேசியாவின் டைடாங் சமூகத்தினரிடையே காணப்படுகிறது. இது ஒருவித உடல்நல ஆபத்து கொண்ட சடங்காகும். ஒரு டைடோங் தம்பதியினர் திருமணம் செய்த பின்னர், ​மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மூன்று நாட்களுக்கு கழிப்பறைக்கும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய தம்பதியினரின் குடும்பத்து பெரியவர்கள் சுற்றிக் கொண்டு இருவரும் கழிப்பறை சட்டத்தை மீறுகிறார்களா என்று கண்காணிக்கிறார்கள். இது இருவருக்கும் இடையிலான பிணைப்பை பலப்படுத்துகிறது என்று திடோங் மக்கள் நம்புகிறார்கள்.

இலங்கையர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த வேறொருவர் மீது எச்சில் துப்புகிறார்கள். ஆனால் மாசாய் பழங்குடியினர் அதற்கு மறுபுறம் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் எச்சில் துப்பி ஆசீர்வாதங்களை தம்பதியினருக்கு கொடுக்கிறார்கள். இந்த பழங்குடியினரின் திருமணத்தில், மணமகளின் தலை மொட்டையடிக்கப்படுகிறது. இது திருமணத்தின் புதிய தொடக்கத்தை குறிக்க வேண்டும் என்பதற்காகவாகும். மணமகள் வெளியேறும்போது இந்த விசித்திரமான வழக்கம் வெளியே வருகிறது. அதாவது மணமகனும், மணமகளும் வெளியேறும்போது, ​​மணமகளின் தந்தை வந்து மணமகளின் தலை மற்றும் மார்பகப்பகுதியில் எச்சில் துப்புகிறார். அந்த ஆசீர்வாதத்துடன், மாசாய் பெண்கள் தங்கள் திருமண வாழ்க்கையை புறப்படுகிறார்கள்.

ஒட்டி ஒட்டி செல்லும் ஸ்கொட்லாந்து ஊர்வலம்: இந்த வழக்கம் பிளக்கனிங் என அழைக்கப்படுகிறது. பண்டைய காலங்களிலிருந்து ஸ்கொட்லாந்தில் இருந்த இந்த திருமண பாரம்பரியம், ஸ்கொட்லாந்தின் தொலைதூர பகுதிகளில் இன்றும் நடைமுறையில் உள்ளது. இந்த சடங்கு திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெறுகிறது. அவர்களது நண்பர்கள் ஒரு ஜோடியின் மீது சில திரவங்களை ஊற்றுகின்றனர். இதை கொஞ்சம் ஒட்டும் வகையில் மீதமுள்ள உணவு மற்றும் பிற ஒட்டும் பொருட்களைப் பயன்படுத்தி செய்கிறார்கள். புதிய தம்பதிகள் மீது ஊற்றி பின்னர் அருகிலுள்ளவர்களுடன் சேர்த்து ஒரு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

பீங்கான் பாத்திரங்களை உடைக்கும் ஜேர்மனியர்கள்: இந்த வழக்கத்தின் பெயர் ‘Polterabend’. இப்போது திருமண பரிசுகளாக நாம் போர்ஸலீன் பீங்கான், கப், ஆபரணங்கள் போன்றவற்றை கொடுப்போம். ஜேர்மனியர்கள்கூட அவற்றை திருமண பரிசாக பயன்படுத்துகின்றனர். ஆனால் புதிய ஜோடிக்கு பீங்கான் பாத்திரங்களை கீழே போட்டு நொறுக்கித்தான் கொடுக்கிறார்கள். இது எவ்வாறு செயற்படுகிறது என்றால், திருமணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, தம்பதியரின் உறவினர்கள் பீங்கான் பொருட்களை மணமகளின் வீட்டிற்கு அல்லது முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்திற்கு கொண்டு வருவார்கள்.

திருமணம் செய்யவிருக்கும் தம்பதியினர் பீங்கான் கிடங்கிற்கு அழைத்து வரப்படுவர். இதைச் செய்வதன் மூலம், தம்பதியினர் பழிபோடுவதிலிருந்து விலகி அதிர்ஷ்டம் அடைவார்கள் என்று ஜேர்மனியர்கள் நம்புகிறார்கள். மணமகனும், மணமகளும் உடைத்த பீங்கான் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும். இத்தகைய விடயத்தின் மூலம் ஒற்றுமை ஏற்படும் என்று ஜேர்மனியர்கள் நம்புகிறார்கள். கொரியாவில், திருமணத்தை முடித்து விட்டு மணப்பெண்ணுடன் வெளிவரும் மணமகன் ஒரு விசித்திரமான சடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதாவது, இரு கால்களிலும் நன்றாக அடி விழும். அதனை தாங்கிக்கொள்ள வேண்டும். மணமகனின் உறவினர்கள்தான் இந்த தாக்குதல் சடங்கை மேற்கொள்கின்றனர். சடங்கு மணமகனின் காலணிகள், காலணி உறை என்பவற்றை கழற்றிவிட்டு, இருகால்களையும் கட்டிவிட்டு கம்பு அல்லது உலர்ந்த மீன்களால் அடிப்பார்கள். இது ஒரு வேதனையான விடயம். ஆனால் இது ஒரு வேடிக்கையான சடங்காக விரைவாக நிறைவேற்றப்படுகிறது.

Kokila

Next Post

மிருகங்களாக நடத்தப்படும் கைதிகள்!… உலகின் மிகவும் கொடூரமான சிறைச்சாலைகள் பற்றி தெரிந்துகொள்வோமா?

Mon Jul 31 , 2023
சில நாடுகளின் சிறைகளில் கைதிகள் மிருகங்களாகவே நடத்தப்படுகிறார்கள். அந்த சிறைகளை “பூமியில் இருக்கும் நரகம்” என்று அழைப்பதில் தவறேதும் இல்லை. அவற்றில் உலகின் மிக மோசமான சிறைச்சாலைகள் எவை என்று இன்று பார்ப்போம். அமெரிக்கா என்பது பிற நாடுகளுக்கு மனித உரிமைகளை கற்பிக்கும் நாடு. ஆனால், அமெரிக்காவில்கூட மனித உரிமைகளை பற்றி யோசிக்காத இடமொன்று உள்ளது. ரிக்கர்ஸ் சிறைச்சாலைதான் அந்த இடம். ஒரு வருடம் அல்லது அதற்கும் குறைவாக சிறைக்கு […]

You May Like