ஆவின் பால் அட்டையை பெறுவதற்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், 15 நாட்களுக்கு தேவையான பாலுக்கு முன் பணத்தையும் செலுத்த வேண்டும். இந்நிலையில் தற்போது ஆரஞ்சு பால்பாக்கெட் 500 மில்லி ரூ.30 எனவும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய், அதே போல் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஆரஞ்சு பால் பாக்கெட்டை அட்டை மூலமாக வாங்குவதால் லிட்டருக்கு அரை லிட்டருக்கு 6 ரூபாய் வரை மிச்சபடுத்த முடிகிறது. அதனால், ஆவின் பால் அட்டைகளை வாங்க நுகர்வோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக மண்டல அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டியுள்ளது. தற்போது இதனால் ஏற்படும் அலைச்சல் நேரத்தை தடுப்பதற்காக ஆவின் நிறுவனம் 10 லட்சம் பேருக்கு இ-பால் அட்டை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.