fbpx

கழுத்து பகுதி கருப்பா இருக்கா? – அப்போ இதை ட்ரை பண்ணுங்க..! – ஒரே வாரத்தில் குட் ரிசல்ட் கிடைக்கும்..!

நிறைய பேருக்கு கழுத்து பகுதி கருமையாக காணப்படும். நகை அணிவதால் ஏற்படும் அலர்ஜி, அதீத வெயில், உடல் பருமன் போன்ற பல காரணங்களால் இந்த கருமை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

கழுத்து பகுதியில் ஏற்படும் கருமை சிலருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. மறுபுறம் இந்த கருமையை போக்க பல வழிகளை முயற்சித்திருப்போம். ஆனால் எந்த விதமான மாற்றமும் இருக்காது. அந்த கருமை அப்படியேதான் இருக்கும். இனி கவலை வேண்டாம். இந்த 2 முறைகளை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. ஒரே வாரத்தில் உங்கள் கழுத்து பகுதி பளபள என மாறிவிடும். உங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும் கிடைக்கும். இந்த வழிமுறைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே தயார் செய்யலாம்.

கோதுமை மாவு கொஞ்சம் எடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து கெட்டியாக ஒரு பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும். பின்னர், இதை கழுத்து பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும்.இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். கழுத்தில் பருக்கள் அல்லது வறட்சி இருந்தால் இந்த வழிமுறையை நீங்கள் பின்பற்ற வேண்டாம். ஏனென்றால், சில சமயங்களில் எரிச்சலூட்டும்.

மற்றொரு முறையையும் நீங்கள் பின்பற்றலாம். கற்றாழை ஜெல்லில் சர்க்கரை மற்றும் பாலை சேர்த்து நன்கு கலந்து, கழுத்துப்பகுதியில் ஸ்க்ரப் செய்யவும். 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுத்தை சுத்தம் செய்யவும். இப்படி தினமும் செய்து வந்தால், கழுத்தில் உள்ள கருமை நீங்குவதுடன், இறந்த சரும செல்களையும் நீக்குகிறது. கற்றாழை ஜெல்லில் ஈரப்பதமூட்டும் பண்புகள் மற்றும் வைட்டமின் C ஆகியவை உள்ளன. இது உங்கள் சருமத்தில் நல்ல ரிசல்ட்டை கொடுக்கிறது.

Read More: ஹிர்சுட்டிசம் அறிகுறியினால் ட்ரோல் செய்யப்படும் முதலிடம் பெற்ற மாணவி! இதன் அறிகுறிகள் மற்றும் காரணம் என்ன?

English Summary

Is the neck area black? – Then try this..! – Get good results in one week..!

Baskar

Next Post

ராணுவத் தளபதி பதவி காலத்தை 2024 ஜூன் 30 வரை நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல்...!

Mon May 27 , 2024
ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் பதவிக்காலத்தை 2024 ஜூன் 30 வரை ஒரு மாதம் நீட்டிக்க அமைச்சரவை நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழு, ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் சி பாண்டேவின் பதவிக்காலத்தை ஒரு மாத காலத்திற்கு, அவரது சாதாரண ஓய்வு வயதுக்கு அப்பால் (மே 31, 2024), அதாவது ஜூன் 30, 2024 வரை, ராணுவ விதிகள் 1954 இன் விதி 16 […]

You May Like