Date Seeds: பேரீச்சம்பழம், சுவையானது மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன. இவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து நிரம்பி உள்ளது. இதனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
இதன் காரணமாக, திடீரென ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் குறைகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம், இதய சம்மந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடல் எடையை அதிகரிக்க பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள கலோரிகள், உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன், பேரீச்சம் பழத்தில் விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்து, மூளை சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது.
பேரீச்சம்பழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால், நோய்களை தடுத்து, உடல் அமைப்பை மேம்படுத்துகிறது. பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு நோய்கள் வராதபடி நம்மை பாதுகாத்து கொள்கிறது.
ஆனால் பெருமபாலானோர் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எறிந்துவிடுகிறார்கள். அவற்றின் திறன்களை உணருவதில்லை. அதாவது, பேரீச்சம்பழ விதைகளைப் பயன்படுத்தி இயற்கையான ஃபேஸ் பேக்கை உருவாக்குவது உங்கள் சருமத்தை பொழிவாக்க ஒரு சிறந்த வழியாகும்.
எப்படி தயாரிப்பது? பேரீச்சம்பழ விதைகளை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தவும். உலர்ந்த விதைகளை நன்றாக பொடியாக அரைக்கவும்.
இந்த பொடியை முல்தானி மிட்டி, தண்ணீர் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் மற்றும் தேனுடன் கலக்கவும். கலவையை உங்கள் முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை புத்துயிர் பெறவும், அதன் அமைப்பை மேம்படுத்தவும், கரும்புள்ளிகள் மற்றும் வறட்சி போன்ற பல்வேறு தோல் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவுகிறது.
பேரீச்சம்பழ விதைகளை உடல் ஸ்க்ரப்பாகப் பயன்படுத்துவது உங்கள் சருமப் பராமரிப்பை மேம்படுத்தும். அதாவது, பேரீச்சம்பழ விதைகளை உலர்த்தி, கரகரப்பான முறையில் பொடியாக அரைக்கவும். இதையடுத்து, தேனுடன் பொடியை இணைக்கவும். இந்த கலவையை உங்கள் உடலில் ஒரு ஸ்க்ரப்பாக பயன்படுத்தவும், இந்த ஸ்க்ரப் இறந்த சரும செல்களை திறம்பட நீக்கி, மென்மையான, அதிக கதிரியக்க சருமத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது.
மேலும், காபி மாற்றாக பேரீச்சம்பழ விதைகளை வறுத்து அரைத்து பயன்படுத்தலாம். பேரீச்சம்பழ விதைகளை கரும் பழுப்பு நிறமாக இருக்கும் வரை வறுக்கவும். அவற்றை தண்ணீரில் ஊறவைத்து மீண்டும் உலர வைக்கவும். வறுத்த விதைகளை நன்றாக தூளாக அரைத்து, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களுடன் கலக்கவும். ஒரு தனித்துவமான காபி அனுபவத்திற்காக இந்த கலவையை சூடான நீரில் அல்லது பாலில் காய்ச்சவும். பேரீச்சம்பழம் காபி காஃபின் இல்லாமல் ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.
Readmore: ஷாக்!. மனைவி மீது ஜெயம் ரவி போலீசில் புகார்!. வீட்டை விட்டு வெளியேற்றியதாக குற்றச்சாட்டு!