ஒவ்வொரு மாதமும் பல முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.. அந்த வகையில் மார்ச் 1 முதல், பல புதிய விதிகள் அமலுக்கு வரும், அது உங்கள் மாதாந்திர பட்ஜெட்டை பாதிக்கலாம். மார்ச் மாதத்தில் சமூக ஊடகங்கள், வங்கிக் கடன்கள், எல்பிஜி சிலிண்டர்கள், வங்கி விடுமுறைகள் போன்ற பல முக்கிய மாற்றங்களைக் காணலாம். அதே நேரத்தில், ரயில் கால அட்டவணையிலும் மாற்றங்களைக் காணலாம். எனவே, மார்ச் மாதத்தில் எந்தெந்த புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன என்பதையும் அவை உங்கள் மாதாந்திரச் செலவுகளை எவ்வாறு பாதிக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
வங்கிக்கடன்களின் வட்டி விகிதம் உயர்வு : இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதற்குப் பிறகு பல வங்கிகள் கடன்களுக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை உயர்த்தியுள்ளன. இது கடன் மற்றும் இஎம்ஐயை நேரடியாக பாதிக்கும். கடன் வட்டி விகிதங்கள் அதிகரிக்கலாம், கூடுதலாக இஎம்ஐ செலுத்த நேரிடலாம்..
LPG மற்றும் CNG விலை அதிகரிக்கலாம் : எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி எரிவாயு விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் நிர்ணயிக்கப்படும். கடந்த முறை எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்றாலும், இம்முறை பண்டிகையை முன்னிட்டு விலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் கால அட்டவணையில் மாற்றம் : கோடை காலம் வருவதால் இந்திய ரயில்வே கால அட்டவணையில் சில மாற்றங்களை மேற்கொள்ளலாம். அதன் பட்டியலை மார்ச் மாதம் வெளியிடலாம். ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில்கள் மற்றும் 5,000 சரக்கு ரயில்களின் கால அட்டவணை மார்ச் 1 முதல் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது…
12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை : மார்ச் மாதத்தில் உட்பட 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வாராந்திர வங்கி விடுமுறையும் இதில் அடங்கும். இந்தியாவில் வங்கிகள் மாதத்தின் முதல் மற்றும் 3வது சனிக்கிழமைகளில் திறந்திருக்கும். 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் காலண்டரின்படி, தனியார் மற்றும் அரசு வங்கிகள் மார்ச் மாதத்டில் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
சமூக ஊடகங்கள் தொடர்பான விதிகளில் மாற்றம் : சமீபத்தில் இந்திய அரசு ஐடி விதிகளை மாற்றியுள்ளது. ட்விட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்கள் இனி இந்தியாவின் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். மத உணர்வுகளை தூண்டும் பதிவுகளுக்கு புதிய விதி பொருந்தும். இந்த புதிய விதியை மார்ச் மாதத்தில் அமல்படுத்தலாம். தவறான பதிவுகளுக்கு பயனர்கள் அபராதத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும்.