fbpx

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு… முதலமைச்சரின் காலை உணவு திட்டம்.. வெளியான புதிய அறிவிப்பு..

1 முதல் 5-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் அலுவலராக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் .

அரசு பள்ளிகளில் 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.. இந்நிலையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது..

1545 தொடக்க பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கு மாணவர்களுக்கு முதல் கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்படும் இத்திட்டம் பின்னர் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.. மேலும் ஒவ்வொரு வாரத்திலும் குறைந்தது 2 நாட்களிலாவது, அந்த பகுதிகளில் விளையும் சிறுதானியங்கள் அடிப்படையில் சிற்றுண்டி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன..

இந்நிலையில் இந்த திட்டத்தினை திறம்பட செயல்படுத்திட ஏதுவாக தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.. இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர், திரு.க. இளம்பகவத், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின், திட்ட ஒருங்கிணைப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அவர் இந்த திட்டத்தை செயல்படுத்த தக்க ஆணைகள் வழங்குவார் என்றும் கூறியுள்ளது..

Maha

Next Post

இதற்காக செய்யும் செலவு இலவசம் ஆகாது.. முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

Sat Aug 13 , 2022
கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. சென்னை கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.. அப்போது பேசிய அவர் “ இலவசங்கள் வேறு நலத்திட்டங்கள் வேறு என்று சமீபத்தில் உச்சநீதிமன்றமே கூறியிருந்தது.. இதுபற்றி நாடு முழுவதும் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது.. கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது.. கல்வி என்பது அறிவு […]

You May Like