கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா வைரஸ், எபோலா வைரஸ், H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸ், குரங்கு காய்ச்சல், மார்பர்க் வைரஸ் என முன்னெப்போதும் இல்லாத பல சுகாதார நெருக்கடிகளை உலகம் கண்டுள்ளது. அந்த வகையில் தற்போது அரியவகை வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.. கொல்கத்தாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு தாவர பூஞ்சை தொற்று (Plant Fungus) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.. உலகின் முதல் பாதிப்பாக இது மாறியுள்ளது. பொதுவாக தாவரங்களைத் தாக்கும் ஒரு பூஞ்சை நோய், முதன்முறையாக மனிதரை பாதித்துள்ளது…

மருத்துவ மைகாலஜி கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் இதுகுறித்த ஆய்வறிக்கையை மருத்துவர்கள் வெளியிட்டனர்.. அந்த ஆய்வறிக்கையில் “ தாவர பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒரு தாவர நுண்ணுயிர் நிபுணர்.. அவருக்கு நீரிழிவு நோய், எச்.ஐ.வி தொற்று, சிறுநீரக நோய், அல்லது எந்த நாள்பட்ட நோயும் அல்லது நோய்க்கான வரலாறும் இல்லை. ஆனால் அவர் தாவர நுண்ணுயிர் நிபுணர் என்பதால் நீண்ட காலமாக அழுகும் பொருட்கள், காளான்கள் மற்றும் பல்வேறு தாவர பூஞ்சைகளுடன் பணிபுரிந்தார். இதனால் அவருக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.. ஆனாலும் முதலில் அவருக்கு இந்த பாதிப்பு இருந்ததை கண்டறியமுடியவில்லை..
நோயாளியின் கழுத்தில் CT ஸ்கேன் செய்ததில், வலதுபுறத்தில் சீழ் இருப்பது தெரியவந்தது. அவரின் கழுத்தில் புண் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து அறுவை சிகிச்சை மூலம் அதை வெளியேற்றினர். இதைத் தொடர்ந்து, அவருக்கு பூஞ்சை காளான் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டது.. தொடர் சிகிச்சைக்கு பிறகு அவர் நோயில் இருந்து குணமடைந்தார்…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவர பூஞ்சையின் அறிகுறிகள் என்ன? கரகரப்பான குரல், இருமல், சோர்வு, பசியின்மை மற்றும் விழுங்குவதில் சிரமம் ஆகியவை அதன் அறிகுறிகளாகும்.. கொல்கத்தாவில் உள்ள அப்பல்லோ மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள் இந்த தாவர பூஞ்சை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.. பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் இந்த பூஞ்சை தொற்றுக்கு மிகவும் பாதிக்கப்படுகின்றனர்..
தாவர பூஞ்சை நோய் ஆபத்தானதா..? இந்த பாதிப்பு அரிதான நிகழ்வாக இருந்தாலும், அழுகும் பொருட்களில் இருந்து, மீண்டும் மீண்டும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நோயாளி ஒரு தாவர நிபுணர் என்பதால், அவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.. மேலும் நோய்த்தொற்றின் தன்மை, பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் போன்றவற்றைக் கண்டறிய முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.. இதனால், மனிதர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் நமது சுற்றுச்சூழலில் உள்ள மில்லியன் கணக்கான பூஞ்சைகளில், தற்போது சில நூறு பூஞ்சைகள் மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்…