சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் வாங்குபவர்கள் வருடம் தோறும் அவர்கள் எந்த மாதத்தில் ஓய்வூதியம் வாங்குகிறார்களோ, அந்த மாதத்தில் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். அதேபோலவே ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட இரண்டும் வாங்குபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியம் வாங்குபவரின் ஓய்வு பெற்ற மாத கணக்கில் வைத்து வாழ்நாள் சான்றிதழ் வழங்க வேண்டும்.
வாழ்நாள் சான்று வழங்கப்பட வேண்டிய மாதத்தில் வழங்கப்படாவிட்டால் ஒரு மாதம் சலுகை வழங்கப்படும் அதற்குள்ளாக வாழ்நாள் சான்று வழங்குவதவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் நடப்பு ஆண்டு ஏப்ரல் மற்றும் மே, ஜூன் மாதங்களில் வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரையில் அலுவலக வேலை தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இருக்கின்ற சிறப்பு முகாமில் வாழ்நாள் சான்றுகளை வழங்கலாம் என்று சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.