fbpx

இவர்களுக்கு எல்லாம் வேலைவாய்ப்பு பதிவு ரத்து கிடையாது…! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க..‌.!

தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தனியார்துறை நிறுவனங்களும்‌ – தனியார்துறையில்‌ பணிபுரிய விருப்பம்‌ உள்ள மனுதாரர்களும்‌ கலந்துகொள்ளும்‌ “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்‌” ஒவ்வொரு மாதத்தின்‌ மூன்றாம்‌ வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள்‌ தங்களுக்கு தேவையான நபர்களை நோடியாக தேர்வு செய்து கொள்ளலாம்‌. இது ஒரு இலவச பணியே ஆகும்‌. இதன்‌ மூலம்‌ தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

அரசுத்துறைகளில்‌ அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்‌. இம்முகாமில்‌, பல்வேறு தனியார்‌ நிறுவனங்கள்‌ கலந்துகொண்டு, விற்பனையாளர்‌, மார்க்கெட்டிங்‌ எக்ஸிக்யூட்டிவ்‌, சூப்பர்வைசர்‌, மேலாளர்‌, கம்ப்யூட்டர்‌ ஆப்ரேட்டர்‌, தட்டச்சர்‌, அக்கவுண்டன்ட்‌, கேசியர்‌, மெக்கானிக்‌ போன்ற பணிகளுக்கு, தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்புஎன அனைத்துவித கல்வித்தகுதிக்கும்‌ ஆட்கள்‌ தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள்‌ தெரிவித்துள்ளன.

ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும்‌ விருப்பமும்‌ உள்ள அனைவரும்‌, வருகின்ற 24.03.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

உறுப்பு தானம்..! 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து...! அரசு அதிரடி முடிவு...! முழு விவரம் இதோ...!

Wed Mar 15 , 2023
அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்வதற்கான 65 வயது என்ற உச்ச வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது எந்த வயது நபரும், இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு பதிவு செய்து கொள்ளலாம். இதே போல, இறந்தவரின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த வாழுமிடம் போன்ற விதிமுறையையும் ரத்து செய்ய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டின் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க அரசு பல்வேறு […]

You May Like