fbpx

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம்…! வெளி மாநிலத்தவர் எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்

வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. வெளி மாநிலங்களில் இருந்து நிரந்தரமாக தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள், புதிய குடும்ப அட்டை பெற eShram என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம், அப்படி இல்லை என்றால் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரால் மேற்கண்ட மனுக்களின் மீது விசாரணை செய்து நிரந்தரமாக தமிழ்நாட்டில் தங்கியுள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்காலிகமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் மேலும் மனுதாரர் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். மேற்கண்ட மனுவினை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களின் மூலம் மனுதாரர்களின் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைத்து புதிய குடும்ப அட்டை பெற்றவுடன் தமிழ்நாட்டில் “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை” திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று பயன் பெறலாம்.

Vignesh

Next Post

பணிப்பெண்ணுடனான ரகசிய உறவு..! நேர்க்காணலில் பகிர்ந்த நடிகர் அர்னால்ட்..!

Tue Oct 3 , 2023
நடிகரும் அரசியல்வாதியுமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் ரகசிய உறவில் ஈடுபட்ட பழைய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். ஜனவரி 2011 இல் ஆளுநரின் அலுவலகத்தை விட்டு வெளியேறிய பிறகு, 65 வயதான நடிகர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், குடும்பத்திற்காக 20 வருடங்கள் வேலை செய்ததாகக் கூறப்படும் வீட்டுப் பணிப்பெண்ணான மில்ட்ரெட் பெய்னாவுடன் ரகசிய உறவில் இருந்ததாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, தனது மனைவி மரியாவுடனான 25 வருட திருமண […]

You May Like