fbpx

வங்கி மோசடிக்கு செக்..! பரிவர்த்தனை சரிபார்க்க ஸ்கேனிங் முறைக்கு அனுமதி…! முழு விவரம் இதோ…

மோசடி மற்றும் வரி ஏய்ப்பைக் குறைக்கும் முயற்சியில், சில சந்தர்ப்பங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட வருடாந்திர வரம்பை மீறும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளை சரிபார்க்க இந்திய அரசாங்கம் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சூப்பர் நியூஸ்..!! இனி ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்கும்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இது குறித்து பிரபல ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியில்; மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை குறைக்கும் விதமாக சில சமயங்களில் முக அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ள இந்திய வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார், பொதுத் துறையைச் சேர்ந்த சில வங்கிகள் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.

மேலும், இந்த வசதியை பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்க்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த சரிபார்ப்பு சோதனை கட்டாயமில்லை. ஆனால், வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் அரசு அடையாள அட்டை, பான் அட்டை ஆகியவை வங்கிகளுடன் பகிரப்படாத சந்தர்ப்பங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் இந்த சரிபார்ப்பு கட்டாயமில்லை மற்றும் வரி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் மற்றொரு அரசாங்க அடையாள அட்டை, நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை, வங்கிகளுடன் பகிரப்படாத சந்தர்ப்பங்களில் இது நோக்கமாக உள்ளது.

Vignesh

Next Post

15 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய சிறுவன்..!! ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம்..!! அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Sat Jan 14 , 2023
15 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி சுமார் ஒரு மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா என்கிற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் காதலித்து வந்துள்ளார். அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறிய சிறுவன், தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார். குஜராத் அழைத்துச் சென்று அங்கு […]

You May Like