fbpx

சென்னை புழல் சிறையில்…..! காவலரை தாக்கிய வெளிநாட்டு கைதி….!

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் இருக்கின்ற பெண்கள் சிறையில் சுமார் 150 க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன இந்த நிலையும் நேற்று முன்தினம் பெண் கைதிகளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பார்த்துவிட்டு பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். இந்த பொருட்களை உரியவர்களுக்கு வழங்கும் பணியில் சிறை காவலர் அயரின் ஜனட் ஈடுபட்டு வந்தார்.

அப்போது திருப்பூர் மாநகர காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கில் சென்ற மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உகாண்டா நாட்டைச் சேர்ந்த நாசமா சரோம் (35) என்ற பெண் தனக்கு வந்த பழம் உள்ளிட்ட பொருட்களை சிறை காவலரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சிறை காவலர் உங்களுடைய டோக்கனை கொடுங்கள் வரிசையாக நங்கள் என்று தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண் சிறை கைதி சிறை காவலரை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Next Post

கடைகளில் பில் போடும் போது உங்கள் செல்போன் எண்ணை கொடூப்பீர்களா..? வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Wed May 24 , 2023
சமீப காலங்களாக ஷாப்பிங் மால்கள், மார்ட்கள் போன்ற இடங்களில் கடைகளில் பொருள்களை வாங்கி பில் போடும் போது அங்கு கவுண்டர்களில் இருக்கும் ஊழியர் வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பரை வாங்கி பதிவு செய்யும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஒரு சில ரீடெயில் கடைகளில் செல்போன் எண்ணை கொடுத்தால் தான் பில்லே ஜெனரேட் செய்ய முடியும் என்ற நடைமுறைகள் கூட இருக்கிறது. இந்த கடைகள் தங்களின் ஆஃபர்கள், ஷாப்பிங் பாயிண்ட்ஸ், சிறப்பு அம்சங்கள் […]

You May Like