fbpx

கள்ளக்குறிச்சி விவகாரம்..! அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் கே.எஸ்.அழகிரி..! பதில் கிடைக்குமா?

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் தொடர்பாக அண்ணாமலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார். கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து சொல்லவில்லை? ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை? முறையான நீதி விசாரணை வேண்டும் என ஏன் கேட்கவில்லை?. எதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை? ஒரு கிறிஸ்தவ பள்ளியில் படித்த ஒரு குழந்தை மரணம் எய்தியதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்றார்கள்.

கள்ளக்குறிச்சி விவகாரம்..! அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் கே.எஸ்.அழகிரி..! பதில் கிடைக்குமா?

அந்த குழந்தை விஷயத்தில் அவ்வளவு ஆர்வம் காட்டியவர்கள், கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜகவினர் இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மவுனமாக இருக்கிறது? என்பதை அறிய தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது” என்றும் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Chella

Next Post

பெண் தலையில் பாறாங்கல்லை போட்டு கொன்ற கொடூரம்.. பாலியல் வன்கொடுமை காரணமா?.. போலீசார் விசாரணை..!

Wed Aug 31 , 2022
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் அரவட்லா மலை பகுதியில் இருக்கும் பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தில் வசிப்பவர் முருகேசன். இவருக்கு வள்ளியம்மாள் (60), முனியம்மாள் (55) என இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவியான வள்ளியம்மாளுக்கு தங்கராஜ், வடிவேல் என இரண்டு மகன்களும் தவமணி ஜெயலட்சுமி என இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த 20 வருடங்களுக்கு முன் தனது கணவனை விட்டு பிரிந்து வந்த வள்ளியம்மாள் அதே கிராமத்தில் இளைய மகன் […]
இரவில் வாலிபருடன் தனியாக சென்ற இளம்பெண்..!! விடிந்து பார்த்தால் மரண செய்தி..!! ஷாக்கிங் சம்பவம்..!!

You May Like