fbpx

கள்ளக்காதல்..!! மனைவியின் பிறப்புறுப்பை கோடாரியால் வெட்டிய கணவன்..!! துடிதுடித்து பலியான சோகம்..!!

மத்தியப்பிரதேச மாநிலம் தலோட் கிராமத்தில் வசித்து வந்தவர் பாலு சிங். 35 வயதான இவரின் மனைவி தேஜ்குன்வர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண் குழந்தையும், 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பாலு சிங் அடிக்கடி தன் மனைவியுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.

இந்நிலையில், சம்பவத்தன்று பாலுசிங் வீட்டிலிருந்து வெளியே நடமாட்டம் இல்லாததால் பொதுமக்கள் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள். கிராமத்தைச் சேர்ந்தவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் வந்து பார்த்தபோது பாலு சிங் வீடு உள்ளே உட்பக்கமாக பூட்டி இருந்திருக்கிறது. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது பாலு சிங் தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார். அவரது மனைவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். அதுவும் கொடூரமாக கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருக்கிறார். இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் முதல் நாளே அத்தை வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் பாலு சிங். சம்பவத்தன்று மனைவியின் கழுத்தை அறுத்து, அந்தரங்க பகுதியை கோடரியாலும் வெட்டி எடுத்து, காதுகளை துண்டித்து , கோடரியால் தாடையை உடைத்து கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். அதன் பின்னர் தானும் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

விமானத்தில் புகைபிடித்த நபர்….! அதிரடியாக கைது செய்த பெங்களூரு காவல்துறை…!

Thu May 18 , 2023
விமானத்தில் பயணம் செய்யும்போது விதிமுறை நேரில் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக மது போதையில் சக பயணிகளிடம் ரகளை செய்வது, விமான பணி பெண்களிடம் சில்மிஷம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு பதற்றத்தை ஏற்படுத்தும் பயணிகளை விமான நிலைய காவல்துறையினர் கைது செய்து தண்டனை வழங்கி வருகின்றன. இது போன்ற அத்துமீறல் சம்பவம் பெங்களூரு விமான நிலையத்தில் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ள நார்வர் […]
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க களமிறங்கும் விமானப்படை..! மத்திய அரசு அதிரடி

You May Like