fbpx

உங்கள் favourite எது?… 80 கிட்ஸின் பிரபலமான வீடியோ கேம்ஸ்!

நிமிடத்திற்கு நூறு சேனல்கள் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் இன்றைய இளைய தலைமுறை, நேரம்காலம் தெரியாமல் வீடியோ கேம்ஸ்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தைகள் இழக்க தொடங்குகிறார்கள்.

எண்பதுகளில் பிறந்த பலருக்கும் இந்த வீடியோ கேம்கள் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்திருக்கும். எழுபதுகளில் மற்றும் எண்பதுகளில் பிறந்த உங்களில் பலரும் இந்த விளையாட்டை கண்டிப்பாக விளையாடி இருப்பீர்கள். அப்படி நீங்கள் விளையாடிய இந்த வீடியோ கேம்களை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்துகிறோம். அப்படிப்பட்ட டாப்டென் வீடியோ கேம்களை பற்றி பார்க்கலாம். 1985ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சூப்பர் மேரியோ வீடியோ கேம், இந்த விளையாட்டு போல வீடியோ கேம் துறையில் எந்த விளையாட்டும் அந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த வீடியோ கேம் வெளியிடப்பட்ட பொழுது அவ்வளவு வரவேற்பை பெற்றது. இந்த வீடியோ கேம் வெளிவந்த சமயத்தில் மற்ற எல்லா வீடியோ கேம்களையும் மக்கள் மறந்து இந்த வீடியோ கேமை மட்டுமே பிரதானமாக விளையாடத் தொடங்கினர். அந்த அளவிற்கு எல்லாரையும் ஆக்கிரமித்த விளையாட்டு இது.

ஸ்ட்ரீட் ஃபைட்டர் வீடியோ கேம் 1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இதை மையப்படுத்தி ஏராளமான சண்டை விளையாட்டுக்கள் வர ஆரம்பித்தது. இந்த ஸ்ட்ரீட் ஃபைட்டர் விளையாட்டு பலராலும் மிகவும் ஆர்வமாக விளையாடப்பட்டு வந்தது. அதன்பிறகு 1991ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஸ்ட்ரீட் ஃபைட்டர் இரண்டு மிகச்சிறந்த வீடியோ கேமாக ரசிகர்களிடம் மாறியது.

1987 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பைனல் பேண்டஸி வீடியோ கேம் பலராலும் அந்த காலத்தில் மிகவும் அதிகமாக விளையாடப்பட்டு வந்த வீடியோ கேம்களில் இதுவும் ஒன்று. பல வித்தியாசமான கிராபிக்ஸ் காட்சிகளோடு அந்த காலத்தில் இந்த வீடியோ கேம் வெளியிடப்பட்டது பலருக்கும் வித்தியாசமான ஒரு விளையாடும் அனுபவமாக இருந்தது.

1989ம் ஆண்டு வெளிவந்தது இந்த சிம்சிட்டி வீடியோ கேம். கட்டிடக்கலை மற்றும் நகரத்திட்டமிடலில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த ஒரு வீடியோ கேம் ஆக அந்த நேரத்தில் இருந்தது. எண்பதுகளில் ஃபைட்டிங் வீடியோ கேம்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வந்தது. அந்த நேரத்தில் இந்த சிம்சிட்டி வித்தியாசமான முறையில் வெளியாகி பலரிடமும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பிரின்ஸ் ஆஃப் பெர்சியா கேம், 1989ஆம் ஆண்டில் வெளிவந்தது. கிராபிக்ஸ் காட்சிகள் மிகப்பெரிய அளவில் வளராத அந்த காலகட்டத்தில் மனித உடல்களை போன்ற தோராயமான வடிவங்களை கொடுத்து வித்தியாசமான முறையில் வெளியிடப்பட்டது இந்த வீடியோ கேம். எண்பதுகளில் வீடியோ கேம்களில் வித்தியாசமான ஒரு விளையாட்டு ஆர்வத்தை இந்த வீடியோ கேம் ஏற்படுத்தியது.1984ஆம் ஆண்டில் இந்த டக் ஹன்ட் வீடியோ கேம் வெளியிடப்பட்டது. இது மற்ற வீடியோ கேம்களை போல சிக்கலான வீடியோ கேமாக இல்லாமல் ஒரு வேடிக்கையாக வித்தியாசமாக இருந்தது பலரையும் கவர்ந்தது. பறக்கும் வாத்துக்களை சரியாகச் சுட்டு சுட்டு வீழ்த்த வேண்டும். விளையாடவும் எளிதாக இருக்கும்.

1981ஆம் ஆண்டில் இந்த டாங்கி ஹாங் வீடியோ கேம் வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டின் கதை ஒரு பெண்ணை கொரில்லா ஒன்று கடத்திச் செல்கிறது. அது பலவிதமான பிரச்சினைகளை ஹீரோவிற்கு ஏற்படுத்துகிறது. அதையெல்லாம் தாண்டி அந்தப் பெண்ணை மீட்க வேண்டியது ஹீரோவின் கடமை. இந்த வீடியோ கேம் பலராலும் விளையாடப்பட்டு மிகவும் பிரபலமாகியது. தி லெஜண்ட் ஆஃப் செல்டா வீடியோ கேம் 1986 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதிரடி சாகசமாக இந்த விளையாட்டு அமைந்தது. இந்த வீடியோ கேம் தொடக்கத்தில் பலருக்கும் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்துள்ளது.

பேக்-மேன் வீடியோ கேம் கதை கதாநாயகன் பேய்களிடம் இருந்து தப்பித்து சென்று கொண்டே இருக்க வேண்டும். இந்த வீடியோ கேம் வெளியிடப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதிக வசூலை செய்த விளையாட்டாகும். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பேக் மேன் பெட்டிகளும் உலக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டுக்குள்ளாகவே 2.5 பில்லியன் டாலர்கள் சம்பாதித்து கொடுத்துள்ளது.

Kokila

Next Post

காதலியை ஆபாச வீடியோ எடுத்து சம்பாதித்த காதலன்; கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

Thu Oct 5 , 2023
கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான மோனிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர், கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஜெயபிரகாஷ் என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளார். ஜெயபிரகாஷ் கட்டிட மேஸ்திரி. நாளடைவில், இவர்களின் பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் வந்துள்ளனர். மேலும், உன்னை மட்டும் தான் […]

You May Like