fbpx

UAN நம்பரை மறந்துவிட்டீர்களா..? கண்டுபிடிப்பது எப்படி..? இனி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்..!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி என்பது இந்திய அரசின் மேற்பார்வையின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு சேமிப்புத் திட்டமாகும். தனியார் மற்றும் அரசு வேலைகளில் ​​பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் பிஎஃப் கணக்கு உள்ளது. மாதந்தோறும் ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் இருந்தும் 12 சதவீத ரொக்கப்பணம் அவர்களின் PF கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல, நிறுவனமும் ஊழியரின் எதிர்கால பயனுக்காக அதே அளவு பணத்தை டெபாசிட் செய்யும். அதற்கு வட்டியும் கிடைக்கும். PF கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் EPFO ​​UAN எனப்படும் தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்படும். இந்த UAN நம்பரை வைத்து பிஎஃப் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இது 12 இலக்கங்களைக் கொண்ட எண். EPF-யின் அனைத்து செயல்பாடுகளுக்கும் UAN அவசியம். ஆனால், புதிதாக பணிபுரிபவர்கள் மற்றும் இன்னும் சிலருக்கு UAN எண் தெரியாது. ஒருவேளை நீங்கள் உங்கள் UAN எண்ணை மறந்துவிட்டால், கவலை வேண்டாம். அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

UAN எண்ணை கண்டுபிடிப்பது எப்படி..?

* முதலில் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in-க்குள் செல்ல வேண்டும்.

* பின்னர் இடது பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள சேவைகள் (Services) பிரிவில் கிளிக் செய்ய வேண்டும்.

* அதில், உங்களுக்கு பல விருப்பங்கள் வழங்கப்படும். அதில், For Employees என்ற ஆப்ஷனைகிளிக் செய்ய வேண்டும்.

* பிறகு, ஒரு புதிய ஆப்ஷன் திறக்கும். இப்போது, உங்கள் கர்சரை கீழே உருட்டவும். இப்போது, உங்களின் இடது பக்கத்தில் சேவைகள் பிரிவில், கீழே கொடுக்கப்பட்டுள்ள Member UAN/Online Service (OCS/OTCP) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* பின்னர், உங்களின் வலது புறத்தில் காணப்படும் முக்கியமான இணைப்புகள் என்பதன் (Important Links) கீழ் இருக்கும் “Know your UAN” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

* இப்போது, புதிய பக்கம் திறக்கப்படும். இப்போது, நீங்கள் உங்களின் தொலைபேசி எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். இது உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும்.

* பின்னர், உங்களுக்கு வரும் OTP எண்ணை உள்ளிட வேண்டும்.

* இதையடுத்து, உங்கள் பெயர், பிறந்த தேதி, ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.

* பிறகு Show my UAN என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் UAN எண் உங்கள் திரையில் தோன்றும்.

SMS மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்

SMS மூலம் உங்கள் UAN எண்ணை தெரிந்து கொள்ள விரும்பினால் முதலில், உங்கள் SMS சேட்-யை ஓப்பன் செய்து அதில் “EPFOHO UAN நம்பர்” என எழுதி 7738299899 என்ற எண்ணிற்கு SMS அனுப்ப வேண்டும். நீங்கள் செய்தி அனுப்பிய 5 நிமிடங்களில் உங்களின் UAN நம்பர் உங்கள் எண்ணிற்கு அனுப்பிவைக்கப்படும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து SMS அனுப்பினால் மட்டுமே UAN எண் அனுப்பப்படும்.

Chella

Next Post

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு..!! புது அப்டேட்..!!

Mon Apr 10 , 2023
அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது மத்திய அரசு முக்கிய முடிவெடுத்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம் திட்டத்தின் தற்போதுள்ள கட்டமைப்பில் எதாவது மாற்றம் தேவையா இல்லையா என்பதை இக்குழு பரிந்துரைக்கும். இந்நிலையில் NPS-ன் கீழ் உள்ள ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களை மேம்படுத்தும் நோக்கில் அதனை திருத்துவது […]

You May Like