உடல் நலக்குறைவால் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்ஜேடி தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் புதன்கிழமை சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக, உடல்நிலை மோசமடைந்ததால், பீகாரின் பாட்னாவில் உள்ள பராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
76 வயதான அவர், கார்டியோ-நியூரோ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு மருத்துவர்கள் குழு அவரது நிலையை கண்காணித்து வருகின்றனர். பாட்னாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பெற்று வந்த அவர் இரவு 9:35 மணியளவில் மேல் சிகிச்சைக்காக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.