fbpx

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் காலமானார்….! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல்…!

ஐசிஐசிஐ வங்கி நிறுவனர் மற்றும் தலைவருமான நாராயணன் வகுல் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

நாராயணன் வகுல் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தென்னிந்தியாவின் கிராமத்தில் பிறந்தார். அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது, லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். அவர் ஆரம்பத்தில் சிவில் சர்வீசஸ்ஸில் சேர விரும்பினார், ஆனால் தனது முதல் முயற்சியில் வெற்றி பெற இயலவில்லை. இருப்பினும், புதிதாக உருவாக்கப்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) நுழைவதற்கான தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். 1955 இல் வங்கி பணியில் சேர்ந்தார். பின்னர் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக எஸ்பிஐயில் இருந்து விலகினார். அவர் சமரசம் செய்யாதவராகவும், நேர்மையானவராகவும் அறியப்பட்டார்.

பின்னர் கடந்த 1981-ல் இந்திய வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றினார். அதன் மூலம் பொதுத்துறை வங்கியின் இளம் வயது தலைவராக அறியப்பட்டார். அதன் பின்னர் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் மற்றும் சிஇஓ பொறுப்பை கவனித்தார். 39 வயதில், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகப் பதவி வழங்கப்பட்டபோது, அவர் மிக உயரத்திற்கு ஏறினார். பின்னர் அவர் 1981 இல் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாறினார். 44 வயதில், எந்தவொரு பொதுத்துறை வங்கியின் இளைய தலைவராகவும் இருந்தார்.

Vignesh

Next Post

260 பேரை கூண்டோடு கைது செய்த ஈரான்!… சாத்தானியம் மற்றும் ஆபாச கலாச்சாரத்தை பரப்பியதால் அதிரடி!

Sun May 19 , 2024
Iran Arrest: சாத்தானியம் மற்றும் நிர்வாண கலாச்சாரத்தை பரப்பியதற்காக சந்தேகத்தின் அடிப்படையில் ஐரோப்பிய குடிமக்கள் 3 பேர் உட்பட 260க்கும் மேற்பட்டோரை ஈரான் போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்பில்லாத ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடுவது ஈரானில் சட்டவிரோதமானது மற்றும் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பாவமாகக் கருதப்படுகிறது. இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று தெஹ்ரானின் தலைநகருக்கு மேற்கே உள்ள ஷஹ்ரியார் கவுண்டியில் “சாத்தானியம் மற்றும் நிர்வாண கலாச்சாரத்தை பரப்பியதற்காக” மிகப்பெரிய கைது […]

You May Like