முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாய் பழனியம்மாள், உடல்நலக்குறைவால் காலமானார். அவரது வயது 96. கடந்த சில மாதங்களாகவே வயது முதிர்வு காரணமா உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செயற்கை சுவாசம் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஓபிஎஸ் தாயாரின் உடல் பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதிமுக விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்காக நேற்று ஓபிஎஸ் சென்னை வந்திருந்தார் ஓபிஎஸ். இந்நிலையில் தாய் மறைந்த தகவல் அறிந்த அவர், உடனடியாக சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் சென்ற அவர் அங்கிருந்து தேனிக்கு புறப்பட்டு சென்றார். தாயாரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.