fbpx

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!! தொண்டர்கள் கவலை..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சமீப காலமாகவே, அரசியல் பணிகளில் இருந்து சோனியா காந்தி கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்தார். பின்னர், ராகுல் காந்திக்கு அந்த பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2019 மக்களவை தேர்தல் தோல்வி காரணமாக தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி, அந்த பதவி மீண்டும் சோனியா காந்திக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் தலைவர் பதவி, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி..!! தொண்டர்கள் கவலை..!!

அதேபோல, சமீபத்தில் நடந்த குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் கூட சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. தற்போது, ரே பரேலி தொகுதி மக்களவை உறுப்பினராக சோனியா காந்தி உள்ளார். கடந்த 2004 – 2014ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் தேசிய ஆலோசனை குழு தலைவராக பொறுப்பு வகித்தார். மத்திய அரசு வகிக்கும் திட்டங்களையும் இலக்குகளையும் அமல்படுத்துவதற்காகவும் கண்காணிக்கவும் தேசிய ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில், பல்வேறு துறை நிபுணர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

Chella

Next Post

திருப்பூர் அருகே பாலியல் புகாரில் மத போதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது!

Wed Jan 4 , 2023
தற்போதைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் எப்போதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு திரியும் கதையாக இருக்கிறது. ஏனெனில் பெண் பிள்ளைகளுக்கு எப்போது யார் மூலமாக ஆபத்து வரும் என்று யாராலும் கணிக்க முடியவில்லை. அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கவுண்டம்பாளையம் கூனம்பட்டி புதூர் ரோஹோபோத் புது வாழ்வு இல்லத்தை சேர்ந்த மத போதகர் ஆண்ட்ரூஸ்(46). இவர் வீரபாண்டி தேவாலயத்திற்கு வருகை தந்தபோது ஒரு பெண்மணியிடம் தங்களுடைய குழந்தைகளை இங்குள்ள […]
வரதட்சணை கேட்காமல் லட்சக்கணக்கில் புரோக்கர் கமிஷன்..!! திருமணம் முடிந்தும் சிங்கிளாக சுத்தும் இளைஞர்..!!

You May Like