fbpx

அரசியலில் அடுத்த பரபரப்பு… அ.தி.மு.க-வில் இணைகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்…! அவரே கொடுத்த விளக்கம்…

தான் அதிமுகவில் இணைய போவதாக வெளியான செய்திக்கு திமுக முன்னாள் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கட்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக கடந்த வாரம் செய்திகள் வந்த நிலையில், திமுகவின் மூத்த தலைவர் ஒருவர், கட்சித் தலைமையகத்திற்கு அவரிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்றார். ஒரு பக்கம் அவரது கணவர் ஜெகதீசன், கட்சியை விமர்சித்து, தொடர்ந்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

கடந்த ஆண்டு மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க.வின் சி.சரஸ்வதியிடம் தோல்வியடைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி, தனது வெற்றி வாய்ப்பை கெடுக்கும் வகையில் சில மாவட்ட நிர்வாகிகள் திட்டம் தீட்டியதாக தலைமையிடம் புகார் அளித்ததாக ஈரோடு திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வருத்தம் அடைந்தார். ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்படுவார் என்ற அவரது எதிர்பார்ப்பும் பொய்த்துப் போனது. இப்படி அரசியல் வட்டாரத்தில் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.

ஆனால் தான் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியதால் அரசியலில் இருந்து ஓய்வு எடுக்க நினைத்தேன். அதனால், தான் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் விளக்க கடிதம் ஒன்றை அளித்திருந்தார். இதை அடுத்து அவர் அதிமுகவில் இணைய உள்ளதாக சமூக வலைதளங்களில் மீண்டும் ஒரு செய்தி வெளியான. அதற்கு விளக்கம் அளித்த அவர், தான் எந்த ஒரு கட்சியிலும் இணைய போவதில்லை என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

அதிரடி... விவசாயிகளின் சொத்துக்களை வங்கிகள் பறிமுதல் செய்வதை தடை...! விதிகளில் திருத்தம் செய்ய அரசு முடிவு...!

Mon Sep 26 , 2022
விவசாயிகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது, ​​வங்கிகளால் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடைமுறையை முடிவுக்கு கொண்டு வர, கர்நாடக அரசு தற்போதுள்ள விதிகளில் தகுந்த திருத்தங்களை கொண்டு வரும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மாநிலத்தில் உள்ள விவசாயிகள் எளிதாக கடனை அடைக்கும் வகையில் விதிகள் திருத்தப்படும் என்று முதல்வர் கூறினார். 14 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்காக வித்யாநிதி […]

You May Like