ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் டெல்லியில் முகாமிட்டுள்ளார், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார், அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தனக்கு எல்லா வாய்ப்புகளும் திறந்தே இருக்கின்றன. கட்சியில் அவமானப்படுத்தப்பட்டேன்.. கட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டேன் என டெல்லியில் முகாமிட்டுள்ள சம்பாய் சோரன், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு மீது குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.