fbpx

ஜாமினில் வெளியே வந்தார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துக் கழகப் பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைந்திருந்தது. அதன்படி, செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும், செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும். சாட்சியங்களை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ளக் கூடாது. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும். விசாரணை கைதியாகவே இருப்பதால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சத்துக்கு இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன், தலா 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடாததால் குழப்பம் நீடித்தது.

இதனையடுத்து பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என அமலாக்கத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதை அடுத்து, செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த பிணை உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் புழல் சிறையில் irunthu தற்போது முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

English Summary

Former Minister Senthil Balaji came out on bail..!

Kathir

Next Post

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு..!

Thu Sep 26 , 2024
The central government has announced an increase in the minimum wage for workers from October 1.

You May Like