சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-இல் இருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில், சட்டமன்ற மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.15,000இல் இருந்து ரூ.17,500ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ.75,000 என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தாண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ. 25,000, விதிகள் திருத்தம் செய்யப்பட்ட பிறகு வழங்கப்படும்” என்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-இல் இருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.