fbpx

2 மாதங்களுக்கு பிறகு இலங்கை திரும்பினார் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச..

மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததால் நாட்டை விட்டு தப்பியோடிய முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச 2 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் கடந்த ஜூலை மாதம் தீவிரமடைந்த நிலையில் அப்போது அதிபராக இருந்த கோத்தபயா ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்த புகுந்த போராட்டக்காரர்கள் கோத்தபயா ராஜபக்சே பதவி விலக வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஜூலை 13-ம் தேதி கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்துடன் இலங்கையை விட்டு தப்பியோடினார். இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற கோத்தபயா பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து சென்றார்.

இந்நிலையில், சுமார் 2 மாதங்கள் கழித்து கோத்தபயா ராஜபக்சே இன்று இலங்கை திரும்பியுள்ளார். தாய்லாந்தில் இருந்து இன்று அதிகாலை இலங்கையின் பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு கோத்தபயா ராஜபக்சே வந்தடைந்தார். இலங்கை வந்த கோத்தபயாவை ஆளுங்கட்சி எம்.பி.க்கள், மந்திரிகள் விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றனர். ராஜபக்சே கொழும்புவின் விஜிர்மா மாவதா பங்களாவில் தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Maha

Next Post

இந்த மாதத்தின் 4 ஞாயிறுகளிலும்.. மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

Sat Sep 3 , 2022
பூஸ்டர் தவணை தடுப்பூசியை விரைவாக செலுத்தும் வகையில், இம்மாதத்தின் 4 ஞாயிற்றுக்கிழமைகளிலும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நுண்கதிர் பிரிவு நுண்கதிர் நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் “ அரசு மருத்துவக் கல்லூரிகளில் மிகப் […]
அதிகரிக்கும் கொரோனா..! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று மெகா தடுப்பூசி முகாம்..!

You May Like