முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக முயற்சிப்பதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தெரிவித்துள்ளார்
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.. மேற்கு ஜப்பானின் நாரா நகரில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும், அவர் மார்பில் குண்டு பாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.. ரத்த வெள்ள்த்தில் கீழே விழுந்த அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். காலை 11:30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக ஜப்பான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, 41 வயதான டெட்சுயா யமகாமி என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த பாதுகாப்புப் படையினரால் யமகாமியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த துப்பாக்கியையும் போலீசார் மீட்டனர். எனினும் அவர் சுடப்பட்டதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக உழைத்து வருவதாகவும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.. தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபுமியோ கிஷிடா ““ முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த நேரத்தில் மருத்துவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். அவர் உயிர் பிழைப்பார் என்று நான் நம்புகிறேன்,” தெரிவித்தார்..