சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார்.
82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்ற அறிவிப்பை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் , தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 1967ம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக முலாயம் சிங் யாதவ் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்தார். 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். உத்தரபிரதேசத்தின் மக்கள் இவரை நேதாஜி என அழைப்பார்கள். ஒரு கட்டத்தில் நெருக்கடி காலத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
இவருக்கு இரண்டு மனைவி இருந்தனர். இரண்டாவது மனைவி சாதனா கடந்த ஜூலை மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவர்களின் மகன் பிரதீக் யாதவ். இவரது மருமகள் அபர்ணா யாதவ் பா.ஜ.கவில்இருக்கின்றார். முதல் மனைவிற்கு பிறந்தவர்கள் மகன் அகிலேஷ்யாதவ் மற்றும் மருமகள் டிம்பிள் யாதவ் ஆகும். இருவரும் சமாஜ்வாடி கட்சியிலேயே உள்ளனர் . 2012 முதல் அகிலேஷ்யாதவ் உத்தரபிரதேசத்தின் முதல்வராக பணியாற்றியுள்ளார்.