வடக்கு டெல்லியின் புராரியில் உள்ள யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலம் லோனியில் வசிக்கும், வாசிம் (15), கமல் (17), இலியாஸ் (20) மற்றும் சமீர் (17) ஆகிய நான்கு சிறுவர்களும் வியாழக்கிழமை அன்று யமுனை ஆற்றுக்கு குளிப்பதற்கு சென்றனர்.
ஆற்றுக்கு குளிக்க சென்ற சிறுவர்கள். வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், நான்கு சிறுவர்களும் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்று தவறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததை நேரில் பார்த்த பட்லா என்ற ஹரிஷ் தெரிவித்தார்.
இதையடுத்து ஆற்றில் மூழ்கிய சிறுவர்களின் உடல்களை மீட்கும் பணிகளை மேற்கொண்டனர். இலியாஸ், வாசிம் மற்றும் கமல் ஆகியோரின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன. தொடர்ந்து சமீரின் உடலை தேடும் பணி நடந்து வருகிறது. மீட்கப்பட்ட உடல்களை காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.