fbpx

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்..! என்னதான் ஆச்சு தமிழக அரசுக்கு? – அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் சூதாட்ட அரக்கன் அடுத்த உயிரை பலி வாங்கியிருக்கிறான். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தால் கடந்த 11 மாதங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. ஆன்லைன் சூதாட்ட உயிர்ப்பலிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், தமிழக முதலமைச்சர் உறுதி அளித்தவாறு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்காதது ஏமாற்றமளிக்கிறது. ஒருவேளை ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை என்றால் அதற்கான காரணம் என்ன? வல்லுனர் குழு பரிந்துரைகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பது குறித்தெல்லாம் தமிழக அரசு மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்.

Caste is good, discrimination isn't: Anbumani Ramadoss- The New Indian  Express

ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு ஆகும். உடனடியாக அதை தடை செய்யப்படவில்லை என்றால் தமிழ்நாடு சமூக ரீதியாகவும், பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி சார்ந்தும் மிக மோசமான சீரழிவுகளை சந்திக்கும். ஆன்லைன் சூதாட்டத்தின் அனைத்து தீமைகளையும் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதன்பிறகும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதில் சிந்தனைக்கோ, தயக்கத்திற்கோ எவ்வகையிலும் இடம் தரக்கூடாது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தின் இன்றைய நிலை குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். அவசர சட்டம் இன்னும் தயாராகவில்லை என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும். அதன்பின்னர் அதை ஆளுநருக்கு அனுப்பி, அவசரச் சட்டத்தை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

’மாநகர பேருந்து ஓட்டுநர், நடத்துனர்கள் கவனத்திற்கு’..! போக்குவரத்துத்துறை அதிரடி உத்தரவு..!

Sat Jul 9 , 2022
சென்னையில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “சென்னை மற்றும் திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவித்துள்ள […]

You May Like