fbpx

சிறுமியை பட்டினி போட்டு ‘கேங் ரேப்’ செய்த கொடுமை! 4 இளைஞர்கள் போக்ஸோவில் கைது!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 17 வயது சிறுமியை நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேவகோட்டை அருகே உள்ள கிராமத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவரின்17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி வீட்டிலிருந்து 3000 ரூபாயை எடுத்துக் கொண்டு சென்றவர் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை மற்றும் குடும்பத்தார் எங்கு தேடியும் மகள் கிடைக்காத நிலையில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் பிப்ரவரி ஆறாம் தேதி தேவகோட்டை பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் மயக்கமான நிலையில் கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலையடுத்து அவர்கள் அங்கு சென்று சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் அதிர்ச்சியான சம்பவங்கள் வெளிவந்தன.

வீட்டிலிருந்து சென்ற சிறுமியை கடத்திய நான்கு இளைஞர்கள் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று அந்த இளைஞர்கள் அவருக்கு பகல் பொழுதில் உணவு எதுவும் கொடுக்காமல் பட்டினி போட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் அந்த நான்கு இளைஞர்களும் சேர்ந்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து பாலியல் வன்கொடுமையும் சித்திரவதையும் செய்திருக்கின்றனர். இது தொடர்பாக அந்த சிறுமி அளித்த தகவல்களின் அடிப்படையில் பாவனா கோட்டையைச் சார்ந்த அண்ணாதுரை என்பவரது மகன் கார்த்திக்(31) கடந்த ஆறாம் தேதி அன்று கைது செய்யப்பட்டு அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் அவருடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அவரது நண்பர்களான அப்துல்லா என்பவரது மகன் முகமது ஷரீப் (22),  ஆரோக்கியசாமி என்பவரது மகன் ஜோஸ் பெர்நாடிக் (19) மற்றும் சேகர் என்பவரது மகன் விஜய் (23) ஆகியோர் தலைமறைவாக இருந்த நிலையில் இவர்கள் அனைவரையும் காவல்துறை கைது செய்து அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. தேவகோட்டை அருகே சிறுமியை இளைஞர்கள் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Rupa

Next Post

எமனாய் வந்த வயிற்று வலி! எலி பேஸ்ட் சாப்பிட்ட இளைஞர் பலி!

Mon Feb 13 , 2023
திருச்சி அருகே திருத்தலையூரில் வயிற்று வலி காரணமாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள திருத்தலையூர் தெற்கு தெருவை சார்ந்தவர் நல்லத்தம்பி மகன் தமிழ்ச்செல்வன் வயது 23. இவர் ஒப்பந்த கூலி அடிப்படையில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தீராத வயிற்றுவலி பிரச்சனையிருந்து வந்துள்ளது. இதற்கு பல்வேறு வகையான மருந்துகள் எடுத்தும் இந்த வயிற்று […]

You May Like