fbpx

PM வீடு திட்டத்தில் முறைகேடு!. அதிமுகவுக்கு ஆப்பு!. சிக்கிய 24 அதிகாரிகள்!.

PM Awas Yojana: அதிமுக ஆட்சியின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டியதில் முறைகேடு நடந்தது தொடர்பாக 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளில் நிறையப் பேர் பயன்பெற்றுள்ளனர். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது 2015ஆம் ஆண்டில் மத்திய மோடி அரசால் தொடங்கப்பட்ட ஒரு லட்சியத் திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் மற்றும் எளிய மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்கப்படுகின்றன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரண்டு வகையாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், கடந்த ஜூன் 9ஆம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற மறுநாளான ஜூன் 10 ஆம் தேதியில், மோடி அரசின் முதல் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பற்றி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்டும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் பலரின் சொந்த வீடு கனவு நனவாகும். இந்த திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் ஏழைக் குடும்பங்களுக்கு மொத்தம் 4.21 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்தநிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை ஒன்றியங்களில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், கடந்த 2017-2018 ஆம் நிதி ஆண்டில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக, அப்போதைய ஆரணி தொகுதி எம்.பி விஷ்ணுபிரசாத் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரணை செய்யும் லோக் ஆயுக்தா ஆணையத்தில், இது தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு எம்.பி விஷ்ணுபிரசாத் புகார் அளித்திருந்தார். அதில், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் (பிபிஎல்) பட்டியலில் இடம் பெற்றவர்களை தவிர்த்துவிட்டு, வசதியான நபர்கள் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர், அதற்கான ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், முறைகேடுகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்களை திரட்டி வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன், புகார் மனு மீது விசாரணை நடத்தி, நேற்று வழக்கு பதிவு செய்துள்ளார். அதன்படி, 2017-2018 ஆம் ஆண்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில், பிடிஓ அலுவலகங்களில் பணிபுரிந்த வந்தவாசி பிடிஓ குப்புசாமி, தெள்ளார் பிடிஓ பரணிதரன், ஆரணி பிடிஓ சீனுவாசன், வந்தவாசி துணை பிடிஓ வில்வபதி, தெள்ளார் துணை பிடிஓ ஜி.ரவிச்சந்திரன், ஜவ்வாதுமலை துணை பிடிஓ அன்பழகன், வந்தவாசி உதவி பொறியாளர் ராமு, தெள்ளாறு உதவி பொறியாளர் கேசவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஜவ்வாதுமலை உதவி பொறியாளர்கள் தமிழ்செல்வன், நிர்மல்ராஜ், வந்தவாசி துணை பிடிஓக்கள் வெற்றிவேல், மணிகண்டன், தெள்ளார் துணை பிடிஓ மணிபாலன், ஜவ்வாதுமலை துணை பிடிஓக்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், வந்தவாசி ஓவர்சியர் கல்பனா, தெள்ளார் ஓவர்சியர் சக்திவேல், ஜவ்வாதுமலை ஓவர்சியர்கள் ஆனந்தகுமார், வீரபத்திரன், வந்தவாசி ஒன்றியம் ஒழப்பாக்கம் ஊராட்சி செயலாளர் சேகரன், கீழ்நர்மா ஊராட்சி செயலாளர் கிருஷ்ணன், சித்தருகாவூர் ஊராட்சி செயலாளர் ராமஜெயம், ஜவ்வாதுமலை நம்மியம்பட்டு ஊராட்சி செயலாளர் பொன்னுசாமி, பலாமரத்தூர் ஊராட்சி செயலாளர் உமாபதி ஆகிய 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2017- 2018 காலகட்டத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் பயன்பெற்ற பயனாளிகளை நேரில் விசாரணை செய்து, தகுதியுள்ள நபர்களா என்றும் அவர்கள் எவ்வாறு இத்திட்டத்தில் இடம் பெற்றனர், ஆவணங்கள் சரியாக உள்ளதா, திட்ட நிதி முறையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதா என்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரிவான விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Readmore: மக்களே…! நாடு முழுவதும் அமலுக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள்…!

English Summary

Fraud in PM housing scheme! Wedge to AIADMK! Trapped 24 officers!

Kokila

Next Post

பயங்கரம்... சென்டர் மீடியனில் இருந்த இரும்பு கம்பி பெண்ணின் கையில் குத்தியது...!

Mon Jul 1 , 2024
A metal bar in the center median pierced the woman's arm

You May Like