ஆதார் கார்டை இலவசமாக புதுபித்து கொள்வதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆதார் கார்டின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு உணர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, வங்கி எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு, ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைப்பு மற்றும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு போன்ற அனைத்து செயல்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆதார் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை உறுதி செய்வதற்காக பதிவு செய்த நாளிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இந்த நோக்கத்திற்காக UIDAI அமைப்பும் ஆதார் அட்டை ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதியையும் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
அதன்படி, ஆதார் கார்டை இலவசமாக புதுபித்து கொள்வதற்கான காலக்கெடு ஜூன் 14 வரை இருந்த நிலையில் தற்பொழுது செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெயர் மாற்றம் ,முகவரி மாற்றம், புகைப்படம் மாரம் மற்றும் பிறந்த தேதி மாற்றம் இலவசமாக புதுபித்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. காலக்கெடு முடிந்த பின் ஆதார் கார்டை புதுபிக்க நினைத்தால் ரூ.50 கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதுபிக்க முடியும். இந்த ஆதார் அப்டேட் இலவச சேவையை மக்கள் myAadhaar போர்ட்டல் வழியாக மட்டுமே அணுகினால் சேவை இலவசமாக கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.