fbpx

மகிழ்ச்சி…! அரசு பேருந்தில் இலவச பஸ் பாஸ்…! மூன்று மாதம் பயணிக்க கால அவகாசம்…!

மாற்றுத்திறனாளிகள் 2023-2024 (31.03.2024 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உடல் ஊனமுற்றோர், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர் ஆகிய மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பயண சலுகைகளை அளித்து வருகிறது. ஊனத்தின் தன்மை,அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது. இலவச பயணச்சலுகை உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச பயணச்சலுகை வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயில்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சையின் பொருட்டு செல்பவர்களுக்கு இலவச பயணச்சலுகை (Free Bus Pass) 2023-2024 (31.03.2024 வரை) என உள்ள பழைய அட்டை வைத்திருப்பவர்களை, 30.06.2024 வரை மூன்று மாத காலத்திற்கு பயணம் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், காஞ்சிபுரம் முகவரியையும், மற்றும் 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வேண்டிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என காஞ்சிபுரம், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

Weather Update: இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்...!

Tue Mar 26 , 2024
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 30-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். 31-ம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு […]

You May Like