ஜூன் 11 முதல் பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டம் கர்நாடக மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது.
பெண்களுக்கு இலவச அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் சக்தி திட்டத்தை செயல்படுத்தி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இத்திட்டத்தின் கீழ், திருநங்கைகள் நான்கு மாவட்ட போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
அதன் படி கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC), பெங்களூர் பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC), வடமேற்கு கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம் (NWKRTC), மற்றும் கல்யாண கர்நாடக சாலை போக்குவரத்து கழகம் (KKRTC) பேருந்துகளில் பயணம் செய்யலாம்.
ஜூன் 11 முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘சக்தி’ திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்று வாக்குறுதி அளித்து, மாநிலத்தில் ஆட்சிக்கு வரும் நாளில் நடைமுறைக்கு வரும் 5 தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.