fbpx

தூள்…! தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! முழு விவரம்

தமிழகம் முழுவதும் 38 மாவட்டத்தில் TNPSC தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் தனது செய்தி குறிப்பில்; வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் சுந்தரவல்லி, தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

குடும்ப ஓய்வூதியம்!… கணவனுக்கு பதிலாக தகுதியான வாரிசுகள் பெற அனுமதி!… மத்திய அரசு அதிரடி!

Wed Jan 31 , 2024
அரசு பெண் ஊழியர்கள் தங்கள் மறைவுக்குப் பிறகு கணவருக்கு பதிலாக தகுதியான மகன் அல்லது மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மகளிருக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் என்ற கொள்கைக்கு இணங்க, நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள விதியில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்மூலம், பெண் பணியாளர் குடும்ப ஓய்வூதியத்திற்கு அவரது கணவருக்கு பதிலாக அவரது மகன் அல்லது மகளை குடும்ப ஓய்வூதியத்திற்கு […]

You May Like