“ மீண்டும் மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ள விடியா அரசு..” இபிஎஸ் கண்டனம்..

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று தெரிவித்தார்.. மேலும் மின்கட்டணத்தை உயர்த்தாவிட்டால் மத்திய அரசின் மானியம் குறைக்கப்படும் என்ற கட்டாயத்தால் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், வீட்டு இணைப்பிற்கான 100 யூனிட் இலவச மின் விநியோகத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். மேலும், 200 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டண உயர்கிறது. அதாவது, 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக கட்டணம் விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்..

மேலும் பேசிய அவர் “ மாதம் 301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ரூ.147.50 உயர்த்தி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.. 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்.. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது.. ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு எந்த பாதிப்பும் வராத வகையில் மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்..

தமிழகத்தில் பேருந்து கட்டணம், மின் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.. பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இது குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.. அவரின் ட்விட்டர் பதிவில் “ தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள் மீது ஏற்கனவே சொத்து வரியை உயர்த்தி, சுமை ஏற்றிய விடியா அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தி மக்கள் தலையில் கடும் சுமையை சுமத்தியுள்ளது கடும் கண்டனத்துக்குரியது..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

கொரோனா தொற்றால் மரணம்..! குடும்பத்தினருக்கு உடனடியாக இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Tue Jul 19 , 2022
கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரத்தை வீணடிக்காமல் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆந்திர மாநில அரசு இந்த நிதியை வேறு […]

You May Like