fbpx

அடேங்கப்பா..! மொத்தம் 20,000 பணியிடங்கள்…! தமிழக அரசு சார்பில் இலவச பயிற்சி வகுப்பு…!

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ வாயிலாக பல்வேறு போட்டித்‌ தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது.

தற்போது தருமபுரி மாவட்ட வேலை நாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌bமத்திய அரசு பணியாளர்‌ தேர்வாணையம்‌ SSC CGL 2022 தேர்விற்கான காலிப்பணியிடங்‌களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பத்திற்கான கடைசி நாள்‌ கடந்த 08-ம் தேதி முடிவடைந்து விட்டது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 28.09.2022 முதல்‌ நடைபெற்று வருகிறது.இத்தேர்விற்கு கணிணி வழியாக மாதிரி தேர்வுகள்‌ நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொள்ள விருப்பம்‌ உள்ளவர்கள்‌ https://bit.ly/3xDGUX என்ற Google படிவத்தில்‌ விண்ணப்பிக்கவும்‌. மேலும்‌ விவரங்களுக்கு தொலைபேசி எண்‌ 004342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்‌. இந்த போட்டித்‌ தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச பயிற்சி வகுப்பில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மாணவர்களே...! அக்டோபர் 17 முதல் 21-ம் தேதி வரை மட்டுமே...! பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு...!

Thu Oct 13 , 2022
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் வழங்க இருப்பதாக […]

You May Like