சேலம் மாவட்டத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-1 முதல்நிலை தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணிக் காலியிடங்களுக்கான தொகுதி – I தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் 22.08.2022 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த தொகுதி – 1 முதல்நிலை தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு, சலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக 08.08.2022 அன்று காலை 10.00 மணி அளவில் துவங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளன. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன., இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 0427 2401750 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC Group – 1 பதவிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.