fbpx

மாவட்டம் தோறும் TNPSC, TNSURB, மற்றும் TRB தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…! இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையததால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 (TNPSC GROUP IV) தேர்விற்கு 6244 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களில் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெறுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர்.

Vignesh

Next Post

Fastag: மார்ச் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!.. KYC அப்டேட் செய்வது எப்படி?

Mon Mar 4 , 2024
Fastag: இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) FASTag -க்கான KYC ஐ செய்து முடிக்க கடைசி தேதி மார்ச் 31 ஆக நீடித்துள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி (Paytm Payments Bank Ltd – PPBL) இன் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் மார்ச் 15 ஆம் தேதிக்குள் தங்கள் கணக்குகளை மற்ற வங்கிகளுக்கு மாற்றுமாறு இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) […]

You May Like