தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்படும் ஆசிரியர் தகுநித் தேர்விற்கான அறிவிப்பு 2023 டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. மேலும் இத்தேர்வு தொடர்பான விவரங்கள் அறிந்து கொள்ள http://www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பணிகளுக்கு வயது வரம்பு கிடையாது. சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான கட்டணமில்லா நேரடி (Offline) பயிற்சி வகுப்புகள் 21.08.2023 அன்று தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
இவ்வலுவலகத்தால் நடத்தப்படவுள்ள TET Paper -I மற்றும் Paper-II தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள https://forms.gle/mAmQdHPf2UJwp5e8 என்ற இணையதளத்தில் பதிவுசெய்து கொள்ள வேண்டும்.