fbpx

சூப்பர் அறிவிப்பு…! நடப்பாண்டிலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள்…!

2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை தொடங்கினார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். 2020-2021ம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, தற்பொழுது 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. இதனை எதிர்கொள்ள வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. 2022-23ம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நடப்பாண்டிலும் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.

Vignesh

Next Post

BUDGET BREAKING | நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாரம்பரிய நெல் ரகங்கள்..!! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!

Tue Feb 20 , 2024
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். பட்ஜெட் தாக்கல் செய்து அவர் பேசுகையில், தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார். 2 ஆண்டுகள் […]

You May Like