சென்னை வந்த திரௌபதி முர்மு.. தனித்தனியாக ஆதரவு தெரிவித்த இபிஎஸ், ஓபிஎஸ்…

நாட்டின் அடுத்த குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.. தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக, பழங்குடியின பெண் திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி தலைவர்களை சந்தித்து திரௌபதி முர்மு ஆதரவு கோரினார்..

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பாஜக மற்றும் கூட்டணி தலைவர்களை திரௌபதி முர்மு சந்தித்தார்.. இந்நிகழ்ச்சியில் பாஜக சார்பில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொன்னையன் உள்ளிட்டோர் அதிமுக சார்பில் பங்கேற்றனர்..

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி திரௌபதி முர்மு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.. எனினும் அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தாலும், விழா அரங்கிற்கு ஓபிஎஸ் செல்லவில்லை..மறுபுறம் எடப்பாடி பழனிசாமி மேடையில் திரௌபதி முர்முவுக்கு அருகில் அமர்ந்திருந்தார்.. மேலும் அதிமுகவின் முழுமையான ஆதரவுடன் திரௌபதி முர்மு இமாலய வெற்றி பெற துணை நிற்போம் என்று தெரிவித்தார்.. பழங்குடியின பெண்ணான திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் ஸ்டாலின் சமூக நீதி பேசி வருகிறார்.. என்ற் தெரிவித்தார்..

எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி அரங்கில் இருந்து புறப்படும் வரை காத்திருந்து ஓபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் திரௌபதி முர்முவை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.. கூட்டணி கட்சி தலைவர்கள் வரிசையில் நின்று திரௌபதி முர்முவை அவர் சந்தித்தார்.. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின் சட்டவிதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று கூறினார்..

Maha

Next Post

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை...!

Sat Jul 2 , 2022
மகாராஷ்டிரா  மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம் பிவண்டி. இந்த பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி  தனது தோழிகளுடன் அவரது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.   அப்போது கணேஷ் என்கிற இளைஞர் அந்த சிறுமியிடம் பாசமாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு கூல்டிரிங்ஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்ததும் அந்த சிறுமி மயங்கி இருக்கிறார். உடனே அந்த சிறுமயைதூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் அந்த […]

You May Like