fbpx

இலவச மின்சாரம்..!! ஆப்பு வைக்கும் தமிழ்நாடு அரசு..!! அதிரடியாக பிறப்பித்த உத்தரவு..!!

விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து அறிக்கை தர மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை சிலர், லாப நோக்குடன் தொழில் தேவைக்கு முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இலவச மின்சார திட்டம், 1983இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரால் கொண்டு வரப்பட்டது.

தொடக்கத்தில் 3 எச்.பி., மோட்டார் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கு, இலவச மின்சாரம் என அறிவிக்கப்பட்டது. பின்னர், திமுக ஆட்சியில் 5 எச்.பி., மோட்டார் வரை வைத்துள்ள விவசாயிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஆனால், இத்திட்டத்தை சிலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான், விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் குறித்து அறிக்கை தர மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் விவசாயத்திற்காக 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு, ஒரு இணைப்புக்கு ஆண்டுதோறும் 30,000 ரூபாயை மின்சாரத்துறை வேளாண்துறை வழங்கி வருகிறது. இந்நிலையில், இலவச மின்சாரத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாக புகார் வந்தால், அதனை உடனே ஆராய்ந்து அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

Read More : அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! ஊதிய உயர்வு, இழப்பீடு தொகை உயர்வு..!! வெளியான சூப்பர் அறிவிப்புகள்..!!

English Summary

The Tamil Nadu government has directed the Electricity Board to submit a report on power lines not in agricultural use.

Chella

Next Post

”மருதமலை மாமணியே முருகையா”..!! மாஸாக வெளியானது ’GOAT’ படத்தின் ட்ரெய்லர்..!! வீடியோ உள்ளே..!!

Sat Aug 17 , 2024
The film team has released the trailer of The Code, which is slated to release on September 5.

You May Like