தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்ட மக்கள் தற்போது வரை மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அதே சமயம் குடியிருப்புகள் நீர் புகுந்து அனைத்து முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் அடித்துச் சென்று விட்டன. இதனால் சென்னையில் பொதுமக்களுக்காக இன்று முதல் 46 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் இழந்த பத்திரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகளில் சில சலுகைகள் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலவச அரிசி, இரண்டு கிலோ சர்க்கரை 50 ரூபாய்க்கும், துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் செய்து தரப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.