fbpx

மகிழ்ச்சி…! தமிழகம் முழுவதும் உள்ள பள்ளியில் இலவச இணையதள இணைப்பு…! அரசு அதிரடி அறிவிப்பு…!

அரசுப் பள்ளிகளில் பிஎஸ்என்எல் மூலம் இணையதள இணைப்பு வசதி சேவைகள் பெற வேண்டும்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில்; அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய இணைப்புகளை அளிக்கும் வகையில் ஒரே சேவைவழங்குநராக தங்களை பரிந்துரைக்குமாறு பிஎஸ்என்எல் கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து ஏற்கெனவே இணைய இணைப்பு பெற்றுள்ள பள்ளிகள் தவிர்த்து, புதிதாக இணைப்பு பெறவுள்ள அரசுதொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் BSNL நிறுவனம் வாயிலாக பிராட்பேண்ட் இணைய சேவையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வகங்களில் சராசரியாக பத்து முதல் இருபது கணினிகள், புரொஜக்டா்களும் நிறுவப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஒருங்கிணைந்த பிராட்பேண்ட் சேவை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இணையத்தின் வேகம் மிகவும் குறைவாக இருந்ததால் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களின் பயன்பாடும் குறைந்தது. எனவே, ஒவ்வொரு பள்ளிகளும் தங்களுக்கு தனித்தனியாக 100 ம்க்ஷல்ள் வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்பை அதிகபட்சம் ரூ.1,500 (ஜிஎஸ்டி உள்பட) கட்டணத்துக்குள் நிறுவிக் கொள்ளலாம். அதற்கான தொகை பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். பிராண்ட் பேண்ட் இணைப்புக்கான நிறுவுதல் கட்டணத்தை பள்ளிக்கு வழங்கப்படும் மானியத் தொகையிலிருந்து செலுத்திக் கொள்ளலாம்.

Vignesh

Next Post

அனைத்து ரேஷன் அட்டைகளும் பொங்கல் பரிசு தொகுப்பு...! தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை...!

Sun Jan 7 , 2024
ரூ.1,000 ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; பொங்கல் பண்டியை தமிழக மக்கள் கொண்டாடும் வகையில், எவ்வித நிபந்தனைகளுமின்றி, பொங்கல் பரிசு அனைத்து குடும்பஅட்டைதாரர்களுக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதையை திமுக ஆட்சியில் இந்த நடைமுறைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5-ம் தேதி வெளியிட்ட […]

You May Like