fbpx

கவனம்…! ஜூலை 10-ம் தேதி வரை இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி…!

ஜூலை 10-ம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி தருமபுரி மாவட்டத்தில் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்க்கொள்ள மொத்தம் 3,56,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 10.06.2024 முதல் 30.06.2024 முடிய மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி முதல் 10.07.2024 முடிய மேற்கொள்ளப்படும். விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகவும்.

கால்நடை வளர்ப்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களின் கைபேசி எண்கள் 9445001113, 9445032563, 9443077435, 8144874747-ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.

English Summary

Free Measles Vaccination till 10th July.

Vignesh

Next Post

சிறப்புமிக்க ஆனி ஆஷாட  அமாவாசை!. விஷ்ணு, சிவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்!. தர்பணம் கொடுப்பதால் 12 ஆண்டுகள் பலன் கிடைக்கும்!

Fri Jul 5 , 2024
Special Ani Ashada New Moon!. Get the blessings of Vishnu and Shiva! Giving darpanam gives 12 benefits!

You May Like