மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வாக்களிக்க சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய இடங்களில் உள்ள வாக்காளர்களுக்கு இலவச சவாரி வழங்குவதாக பைக் டாக்ஸி சேவையான ரேபிடோ தெரிவித்துள்ளது.
இது குறித்து ரேபிடோ தனது அறிக்கையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆதரவுடன் 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களின் போது ‘KadamaiKaanaSavaari” முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. “தேர்தல் நாளில், வாக்காளர்கள் ‘VOTENOW’ குறியீட்டைப் பயன்படுத்தி Rapido செயலியில் இலவச சவாரிகளைப் பெறலாம் மற்றும் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த முயற்சியானது எடுக்கப்பட்டுள்ளது என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த முயற்சியானது குடியிருப்பாளர்களின் வாக்களிக்கும் உரிமையை எளிதாக்குவதையும், தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த முயற்சி Rapido இன் நாடு தழுவிய பிரச்சாரத்துடன் ஒத்துப்போகிறது, தேர்தல் நாளில் இலவச சவாரிகளை வழங்குவதற்காக 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்களை நிறுவனம் ஈடுபடுத்துகிறது.
“சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் தங்கள் குடிமக்கள் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்” என்று ரேபிடோவின் இணை நிறுவனர் பவன் குண்டுபள்ளி கூறினார்.