fbpx

இலவச பயிற்சி வகுப்பு… விண்ணப்பிக்க நாளை தான் கடைசி…! TRB தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க…!

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளம் வாயிலாக 07.12.2023 வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தருமபுரியில் 22.11.2023 முதல் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://tinyurl.com என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்துக் கொள்ள வேண்டும். மேலும் தொலைபேசி எண் 04342-296188 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-II-இல் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த நபர்கள் இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

17 நாட்கள் வாழ்வா சாவா போராட்டம்!… 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு!… உறவினர்கள் நெகிழ்ச்சி!

Wed Nov 29 , 2023
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் 17 நாள் கடின போராட்டத்திற்குப் பிறகு நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மீட்புப்பணியாளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி, சில்க்யாரா பகுதியில் சார்தாம் யாத்திரை நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் 4.5 கிமீ சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 12ம் தேதி, இப்பணியின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து […]

You May Like