fbpx

மகிழ்ச்சி…! அரசு பேருந்தில் இலவச பயணம்… இனி இவர்களுக்கும் பொருந்தும்…! தமிழக அரசு அதிரடி

சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள் உள்ளிட்டோருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழ்நாடு முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள். தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 01.06.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரிய வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தால், இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமின்றி. பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Free travel in government bus… will now apply to them too

Vignesh

Next Post

நீங்க தினமும் போற சாலையில் இதை கவனிச்சிருக்கீங்களா..? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

Fri Oct 11 , 2024
Various lines are painted on the roads to prevent accidents and advise how to navigate the roads.

You May Like